02/10/2024, பகவத்கீதை, பகுதி 48
- mathvan
- Oct 2, 2024
- 1 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
உலகத்து நாயகியே, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
உன்பாதம் சரண்புகுந்தோம், -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
… பலகற்றும் பலகேட்டும், -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பயனொன்று மில்லையடி, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நிலையெங்கும் காணவில்லை, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நின்பாதம் சரண்புகுந்தோம், -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
…
துணிவெளுக்க மண்ணுண்டு, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல்வெளுக்கச் சாம்பருண்டு, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மணிவெளுக்கச் சாணையுண்டு, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம்வெளுக்க வழியில்லை, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!... மகாகவி பாரதியார், முத்துமாரியம்மா பாடல்
மனம் வெளுக்க வழியில்லையே என்று எடுத்துரைக்கிறார். இந்தப் பாடலின் இறுதியில் என்ன சொல்கிறார் என்றால்
அடைக்கலம் இங்கு உனைப் புகுந்தோம், -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பல வகையினில் முயன்றாலும் நடக்கவில்லையென்றால் சரணடைவதனைத் தவிர வழியில்லை என்கிறார். அதற்காகவும் வருந்தாதே என்கிறார். இதுதான் பற்றற்றுச் செயல் ஆற்றுவது.
எனவே, மனம் வெளுக்க வழியும் உண்டு. அதுதான் பற்றுகள் இல்லாமல் கடமைகளைச் செய்வது. அதோடு நிறுத்திக் கொள்வது அஃதே சாங்கிய யோகம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





Comments