top of page
Search

23/09/2024, பகவத்கீதை, பகுதி 39

  • mathvan
  • Sep 23, 2024
  • 2 min read

அன்பிற்கினியவர்களுக்கு:

வர்ணங்களைத் தொடர்வோம்.


பொருள்களை உற்பத்தி செய்பவர்கள் இருந்தால்தான் ஒரு நாடு வளம் பெறும். அந்தச் சூத்திரங்களை அறிந்தவர்கள்தாம் சூத்திரர்கள் என்று இருந்திருக்க வேண்டும். அதனைப் பிற்காலத்தில் திரித்தும் இழித்தும் கதைகளைக் கட்டிவிட்டார்கள். இவர்களின் பிரிவு ஆங்கிலத்தில் Production department வழங்குகிறார்கள்.


உற்பத்தியான பொருள்களை ஒருவர் திறமையாகச் சந்தைப்படுத்த வேண்டும். இந்தப் பிரிவினை வணிகர்கள் (வைசியர்கள்) என்றார்கள். இவர்களின் பிரிவு ஆங்கிலத்தில் Marketing and sales department என்று வழங்குகிறார்கள்.


Marketing என்பதற்கும் Sales என்பதற்கும் வேறுபாடு உண்டு. சுருக்கமாக: முதன் முதலாக ஒரு பொருள் சந்தைக்கு வரும்போது அதன் தேவைகளை விளக்கிச் சந்தைப்படுத்துதல் Marketing. சந்தைக்கு வந்தபின் அவற்றைத் தொடர்ந்து விற்பனை செய்வது Sales!


மேலே சொன்ன உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தும் பிரிவுகளைக் கட்டிக் காக்க வேண்டும். அதற்குச் சரியான முறையினில் நிர்வாகம் செய்ய கூரிய மதியுடன், செயல் திறம் மிக்கவர்கள் தேவை. அவர்களை மேலாண்மை செய்பவர்கள் (சத்திரியர்கள்) என்றார்கள். இதனை Management department வழங்குகிறார்கள்.


மேலே சொன்ன மூன்று பெரும் பிரிவுகளுக்கு மதி ஆலோசனை வழங்க அதனில் சிறந்தோர் வழி காட்டிட வேண்டும். இவர்களின் பணியானது மிகவும் முக்கியமானது. இந்தப் பிரிவினில் இருப்பவர்கள் நாட்டினில் நிகழும் மாற்றங்களைக் கவனித்து அதற்குத் தகுந்தார்போல் பல்வேறு புதிய உத்திகளைக் கற்று அனைவர்க்கும் கடத்த வேண்டும். இது சரியாக இல்லாத காரணத்தினால்தான் பல் வேறு நிறுவனங்கள் செயல்பட முடியாமல் முடங்கிவிடுகின்றன. இந்தப் பிரிவினை Top management என்கிறார்கள். இவர்களை அந்தணர்கள் என்றார்கள்.


அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டு ஒழுகலான் என்றார் நம் வள்ளுவப் பேராசான். காண்க https://foxly.link/easythirukkural_30_அந்தணர்.


ஆனால், இந்த நான்கு பிரிவுகள் பிறப்பினால் வரும் என்றும்  பலவிதப் பிற்போக்கு வரைமுறைகளைச் சொல்லிக் கொண்டுள்ளார்கள். யாரும் எப்பிரிவிற்கும் செல்லலாம்.


இப்பொழுது “யார் தமிழர்கள்?” என்று கண்டறிய ஒரே சோதனை அவர்களின் சாதி என்னும் நிலைக்கு நம் அரசியல் நகர்ந்து வந்துள்ளது ஆச்சரியமானது.

மாற்றம் ஒன்றே மாறாதது. பிறப்பிலேயே வர்ணங்கள் அமையும் என்றால் இஃது அறிவிற்கும் ஒவ்வாது; வாழ்க்கைக்கும் உதவாது.


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான் --- குறள் 972; அதிகாரம் – பெருமை

 

 

அர்ஜுனனுக்குத் தேரோட்டியாகக் கிருஷ்ண பரமாத்மா என்றவுடன் அவனுடன் எதிர் நிற்கப் போகும் கர்ணனிடம் துரியோதனன் உனக்குச் சாரதியாக யார் வேண்டும் என்று கேட்க இறுதியில் சல்லியின் என்னும் அரசனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். சல்லியனைப் பெரும்பாடுபட்டுத் துரியோதனன் இந்தப் பணியினை ஏற்குமாறு செய்கிறான்.

 

கர்ணனின் மனத்தில் தாம் ஒரு தேரோட்டியின் மகன் என்ற மாறாத வடு இருந்து கொண்டிருக்கிறது. அந்தத் தேரோட்டியின் மகனுக்குச் சாரதியாக ஓர் அரச வம்சத்திலிருந்து ஒருவர்! அவன் மனத்தில் மிக்க மகிழ்ச்சியும் பெருமிதமும்! நண்பனுக்கு நன்றி கூறுகிறான்.

 

நாளைத் தொடர்வோம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.


ree

 
 
 

Comments


© 2025 Mathivanan Dakshinamoorthi

bottom of page